search
top

மட்டக்குச்சி – விக்கிவிக்னேஷ்

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ? அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும். தேயி லைத் தட்டும் மட்டுக்குச்சியின் உயரத்துக்கே வளர முடிந்த இந்த வீட்டுக் கூரையுள், கூனிகுறுகி வளராத எங்கள் காலத்தை, பிள்ளையின் வழியிலாவது வளர்த்துவிட பாடாதபாடு படுகிறேன்… ‘ஆறு மணி ஆகிருச்சி, இந்த புள்ள இன்னும் எழும்பாம இருக்கு… மலரு…. மலரு… எழும்பும்மா…. ஸ்கூலுக்கு நேரமாகிறிச்சி… – (நான்) ‘இன்னைக்கி மட்டும் வீட்டில இருக்கேம்மா…’ – (மலர்) ‘இப்படி சொல்லிதானே நேத்தும் வீட்டில இருந்த… இன்னைக்கு மட்டும்தானே ஸ்கூல், நாளைக்கு லீவுதானே.. இன்னைக்கு ஒருநாளைக்கு போய்ட்டு வாம்மா… எனக்கும் பெரட்டுக்கு நேரமாச்சி….’ – நான் இந்த பிள்ளையின் கனவை நான்தான் காண்கிறேன்… இவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. இவளை எப்படியாவது கரை சேர்த்துவிடத்தான், என் நாட்களை எல்லாவற்றையும் கரைத்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் அவள் இப்படி தூங்குவதை பார்க்க எரிச்சலாக இருந்தது… அடித்து எழுப்புவதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. பெரட்டு களத்தில் கொஞ்சம் சுணங்கினாலும் வேலை இல்லை, அரைபேரு என்று என் கனவுக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளையே கேட்க வேண்டி வரும்… எங்களை நாங்களே மட்டம் தட்டிக் கொள்ளும் வரிச்சிக்குச்சியை எடுத்து பிள்ளையின் பின்பக்கத்தில் நான்கு போட்டேன்… ‘எத்தன முறை சொல்றது உனக்கு.. நீ படிக்கனுதானே நா மாடா உழைக்கிறேன்… எழும்பி பொய்ட்டு பொறப்படு…’ – (நான்) அடி உதவுவதை போல எதுவும் உதவாது.. அம்மாவின் பேச்சை கேட்காமல், மட்டக்குச்சியின் பேச்சைக் கேட்டு எழுந்து போன மகளை பார்த்துக் கொண்டே அவளுக்கு கொடுத்த நான்கு அடிகளை எட்டாக நான் எனகே கொடுத்துக் கொண்டேன்.. காடு மலை ஏறி கடினமாகிப் போன என் கால்களுக்கே இத்தனை வலி என்றால், என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும்? மலைக்கு கொண்டு செல்ல கட்டி வைக்கப்பட்டிருந்த ரொட்டித்துண்டுகளை கூட எடுத்துச் செல்ல மனம் வரவில்லை. அம்மாவிடம் அவளை பாடசாலைக்கு அனுப்புமாறு கூறிவிட்டு பெரட்டுகளத்துக்கு ஓடினேன். எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமதம்தான்… ஆனாலும் சிலநேரங்களில் அந்த ஐயாமாருக்கு இரக்கம் வரும். இன்றும் வந்திருக்கிறது போலும், ஒன்றும் சொல்லாமல் என்னையும் சேர்த்து இன்னும் கொஞ்சம் பேரையும் ஏழாம் நம்பர் மலைக்கு போகசொன்னார். இருக்கும் மலைகளிலேயே ஏழாம் நம்பர் மலைதான் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இதில் ஏறி இறங்குவதற்குள் பாதி உயிர் பறிபோய்விடும். எல்லாம் என் பிள்ளையின் வயிற்றுக்கும், எதிர்காலத்துக்குமாக எண்ணி நடையை கட்ட வேண்டியதுதான்… சாரத்தை மடித்து தலையில் கட்டி தேயிலைக் கூடையை தலையில் மாட்டிக் கொண்டு நடையை கட்டும் போது… ‘ராஜேஸ்வரி…. எங்க ஓடுற…?’ என் பக்கத்துவீட்டு சரோஜா.. அவளும் ஏழாம் நம்பர்தான் போல… எனக்கு முன்னரே வந்துவிட்டாள். நானும் அவளும் முன்னர் பள்ளித் தோழிகள். ஐந்தாம் வகுப்போடு நான் நின்றுவிட்டேன். சரோஜா பத்தாவது வரை படித்தாள். இப்போது மலைத்தோழிகள்… ‘ஏன் ஒருமாறி இருக்க? எதும் பிரச்சினையா’ – (சரோஜா) ‘இல்லடீ.. காலையிலயே புள்ளய அடிச்சிபுட்டேன்… அதான் ஒரே கொடச்சலா இருக்கு…’ – (நான்) ‘ஏன்… ஸ்கூல் போகமாட்டடேனு கரைச்சகுடுத்தாளோ’ – (சரோஜா) ‘ம்ம்…’ – (நான்) ‘சரி விடுடீ… என்னமோ நாமெல்லாம் எந்தநாளும் ஸ்கூல் போன மாரி… ஆடிக்கு ஒருக்காலும் அம்மாசிக்கு ஒருக்காலுந்தான் நம்மலே ஸ்கூல் போனோம்… மறந்துட்டியா?’ – (சரோஜா) ‘அப்ப நம்மல மாதிரியே அவளயும் கொழுந்தெடுக்க விட சொல்றியா’ – (நான்) ‘நம்ப புள்ளைக வேற என்னத்த செய்ய போகுதுக… அஞ்சாவது படிச்ச நீயும் கொழுந்துதான் எடுக்குற, பத்தாவது படிச்ச நானும் கொழுந்துதான் எடுக்குறேன்.. உன் புள்ளமட்டும் என்னத்த செய்ய போகுது…?’ – (சரோஜா) ‘சீ… வாய மூடு…’ – (நான்) அந்த இடத்தில் எனக்கு வேறு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. அவள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இந்த தோட்டத்தில் படித்த யார்தான் இதைவிட்டு வெளியில் சென்று சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறார்கள். எல்லோரும் இதே வேலைதான். மிஞ்சி மிஞ்சி போனால் திருமணம்... read more

விலை மாதருக்கும் கீழ்…

விலை மாதருக்கும் கீழ்… கொழுந்தெடுக்கும் எம் குடியின் கொடுமைகள் விரியக் கண்டும் கொளுந்துவிட்டு குலமகளோ அனுதினம் எரிதல் கண்டும் மடமையின் நுனிக் கரையில் -தம் மக்கள் துடிக்கக் கண்டும் வறுமையின் பனிக் குழியில் சமூகமே தவிக்கக் கண்டும் தலைமையென்று வேஷமிட்டு புலமையற்ற கோஷமிட்டு செயற் திறனற்றவர்கள் விலை மாதருக் கீழே தான் கண்ணீரை சூடேற்றி காயத்தின் மீதூற்றி கயவர்க்காய் துணைப் போகும் யாவருக்கும் இதுவேதான்…. குலமக்கள் குளம் நடுவில் குமுறியழும் குரல் கேட்டும் குதூகலமே நம் வேலை – எனும் இளசுகளும் அதுவேதான்…. கரை பிடிக்க நமக்குள்ள கல்வியெனும் துறை முறையை கலவிக்கும் காசுக்கும் உருமாற்றும் குரு குலமும் இதுவேதான்…. மலையகத்தின் மாற்றம் உருவாக்க கூட்டம் வெளி வரும் தாக்கம் சீக்கிரம் ஆக்கம் ………….. மலைத்தாயின் தவப் புதல்வன் அருண் வெங்கடேஷ் https://arunwengadesh.wordpress.com/... read more

காதலை காயப்படுத்தாதே ….!!!

    என்னை காயப்படுத்துவதாய் …. நினைத்து காதலை …. காயப்படுத்தாதே ….!!!   இத்தனை நாள் … பத்திரமாய் இருந்த நீ இப்படி இதயத்தை …. காயப்படுத்துகிறாய் ….!!!   சிறையில் இருந்து … தப்புவதற்காக கைதி …. சிறை சாலையை … சேதப்படுத்துவதுபோல்…. என் இதயத்தை சேதபப்டுத்தி இருகிறாய் ,,,,!!!   நான் ஒரு மூடன் …. நீ காதலோடு இருகிறாய் … என்ற கற்பனையில் … வாழ்ந்து விட்டேன் … சற்று ஜோசித்திருந்தால் … நானே உன்னை விடுத்தலை …. செய்திருக்கலாம் ….!!!   போகட்டும் விட்டுவிடு …. காதல் என்றாலும் தப்படும் … காதலை காயப்படுத்தாதே …!!! கே... read more

புரியாத காதல்

புரியாத காதல் என் மனம் கொள்ளை போனது என்னை அறியாமல் உன்னிட்டதில் எனக்கு தெரிந்து சென்றுந்தால் என் காதல் உனக்கு புரிந்திருக்கும் நீயும் என்னுடன் வாழந்த்துருப்பாய் நானும் உயிரோடு இருந்துருப்பேன் உனக்கு புரியாமல் போனதால் என்னவோ நான் மட்டும் தனிமையில் தவிக்குறேன் உன்... read more

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்…

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்… இன்னைக்கு பேசப்போறது எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான். நாம் எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை ஒரு நொடியில் முடிவெடுக்கப்படுபவைதான் என்பதை எல்லாரும் அறிவோம். அப்படி எடுக்கும் முடிவுகள் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதையே கொஞ்ச நேரம் யோசித்து… இதைச் செய்யலாமா… வேண்டாமா… என முடிவெடுத்தால் பல கெட்ட முடிவுகளை நாம் எடுக்காமலே விடமுடியும். ஆனால் அதை நாம் செய்வதில்லை என்பதே உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீடியோ பார்த்தேன்… ஒரு இளம்பெண் இரயில்வே ஸ்டேஷனில் போனில் பேசிக்கொண்டு இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது இரயில் வருகிறதா என்றும் பார்க்கிறாள். பார்ப்பவர்கள் எல்லாருமே அவள் இரயிலுக்குக் காத்திருப்பதாகத்தான் நினைத்திருப்பார்கள். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தாள்… ஆனால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக. ஆம் இரயில் அருகே வர படக்கென்று நடைமேடையில் இருந்து குதிக்கு தண்டவாளத்தில் படுத்துவிட்டாள். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என்று திகைக்க, சிலர் சிரத்தையாய் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு லைக்கும் கமெண்ட்டும்தானே மனிதாபிமானம். இரயில் ஏறி அவளை இரண்டு துண்டாக்கிச் சென்றது. எதற்காக இப்படி ஒரு முடிவு… அப்படி என்னதான் பிரச்சினை என்றாலும் பொறுமையாய் சிந்தித்து அதற்கான முடிவை எடுத்தால் எல்லாம் சுகம்தானே. அவசர முடிவால்தான் நாங்கள் ஒருவனை இழந்தோம். அந்த நொடி தற்கொலை முடிவு அவர்களுக்கு சரியானதாகத் தெரிகிறது. ஆனால் அதன் பின்னான வாழ்வில் தினம் தினம் அவர்களின் குடும்பம் செத்துக் கொண்டிருப்பதை அவர்கள் நினைப்பதில்லை. ம்… எல்லாம் அந்த நொடியின் செயல்பாடுகள்தானே. நாம் ஒரு நொடி சிந்தித்தால் நல்ல அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்திடலாம். நம் குறைகளை ஓரளவுக்காகவாவது நிறைவேற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை தேர்ந்தெடுத்திடலாம். வாழவே முடியாது என்ற நிலையில் இருந்து இதிலும் வாழ்ந்து பார்த்திடலாம் என்றும் நினைத்திடலாம். இந்தப் பாடம் அப்படி என்ன பெரிய விஷயம்… என்னால் பாஸாக முடியும் என்று நினைத்தால் கஜினி முகமது படையெடுப்பை கட்டுக்குள் வைத்திடலாம். இப்படி நிறைய விஷயங்களில் நம்மால் ஜெயித்திருக்க முடியும். ஆனால் எதையும் சிந்திப்பதில்லை. காசு கொடுத்தா போதும் அவனுக்கு குத்திட்டு வந்து குத்துதே குடையுதேன்னு கவிழ்ந்து கிடப்போம். காதல் தோல்வியா, பரிட்சை தோல்வியா கயிறையோ மருந்தையோ எடுத்துக்கிட்டு போயி முடிச்சிக்குவோம்.  எல்லாம் ஒரு நொடி முடிவுதானே. இந்தா கச்சா எண்ணெய் 28 டாலருக்கு வந்திருச்சு. இங்க கம்பெனிக்காரன் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறான். கட்டுமானப் பணியில் அமீரகத்தில் பிரபலமான ETA (இது தமிழரின் கம்பெனி) குழுமம் இன்று தனது பணியாளர்களில் 35% பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இது தற்போது நண்பர் சொன்ன தகவல். இப்படி நிறைய கம்பெனிகள் ஆட்டம் கண்டுபோய் இருக்கின்றன. என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் விலை குறையாது. காரணம் தனியார் முதலாளிக்கு சொம்பு தூக்கும் அரசாங்கமே. 127 டாலர் இருக்கும் போது இருந்த விலைக்கும் 30 டாலர் இருக்கும் போது இருக்கும் விலைக்கும் சில ரூபாய்களே வித்தியாசம். இதையெல்லாம் நாம் கேட்கமாட்டோம். ஏனென்றால் நம் சிந்தனையெல்லாம் இதில் மட்டும்தானா..? அவனும் ஒரு ரூபாய் கூட்டினால் 75 பைசா இறக்குவான். விலை கூடும்போது நள்ளிரவு முதல்ன்னு காலையில அறிவிப்பான். பங்குக்காரனும் பெட்ரோல் இல்லைன்னு சொல்லி ஸ்டாக் வச்சி நள்ளிரவுக்கு மேல நல்லாச் சம்பாரிச்சுக்குவான். இப்படித்தான் ஓடுது…. இனியாவது ஒரு நிமிடம் சிந்தித்து செயல்படுவோம் மக்களே… (இது விஜயகாந்த் சொல்லும் மக்களே இல்லைங்கோ) சரிங்க… என்னடா இவன் ஆபீஸ்ல நடந்த கதையின்னு சொல்லிட்டு என்னமோ பேசுறானேன்னு பார்க்கிறீங்கதானே… இல்லை கச்சா எண்ணெய் பிரச்சினை இங்க கடுமையாத் தாக்கும் போல தெரியுது. எங்க கம்பெனி வேலை எல்லாமே அரசாங்க வேலைகள் என்பதால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் இப்ப பார்க்கிற வேலைக்குப் பின் புதிய வேலை எதுவும் இல்லை என்பதே உண்மை. அரசு அலுவலகங்கள் புதிய வேலைகளில் இன்னும் துணிந்து இறங்கவில்லை என்பதும் உண்மை. ஒரு வேலை போனால் அதே நிலையில் வேலை... read more

புல்லாங்குழல்

புஹாரி( வடகரை) ஆம்! என்னவளும் ஒரு புல்லாங்குழல்தான், அதை வாசிக்க நினைத்தவர்களின் மத்தியில் நேசிக்க நினைத்தவன் என்பதால்தான் என்னவோ அதன் இசை ஸ்வரங்களை என் இரு விழி நரம்புகளிலும் சுமக்கும் வரம் கிடைத்தது ஒரு கணம்!!!! என் இரு விழி நரம்புகளிலும் அதன் இசை நாளங்களை இணைத்தேன் உயிர் கொடுத்தேன் பின் உரு கொடுத்தேன் உணர்வில்லாது நடமாடும் உலகம் என்னவளின் சுவாசம் மட்டும் என்னுடன்… சத்தியமாக சொல்கிறேன் நான் தவறவிட்ட புல்லாங்குழலல்ல அவள்.. என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட புல்லாங்குழல்.. ஏனோ! அதை வாசிக்க நினைத்தவர்கள் உறவுகள் என்பதாலா, இல்லை அதற்கு நான் தகுதியற்றவன்... read more

வலி சுமந்த நெஞ்சம்…

கட்டியழ தோளுமில்ல கண்ணீர துடைக்க யாருமில்ல எட்டி ஒரு சேதி சொல்லி -எங்கள் குறை தீர்க்க வழியுமில்ல …. நாதியற்று போனதால நாடு நாடா அலையுரமே … நம்பிக்கையை ஏந்திக்கொண்டு நாலா திசையும் திரியுரமே …. சிந்திய இரத்தமெல்லாம் .. சிறகொடிந்து வாழ்வதற்க்கா ..? எம் தலைவன் விதைத்த விதை எறும்பு தின்று அழிவதற்கா ..? குண்டு துளைத்த நிலம் … குற்றுயிரும் …கொலையுயிராய் … குடியேற்ற சிங்களவனால் கொடுமைதான் தொடர்கிறதே …. மண் காக்க உயிரிழந்து .. கையிழந்து …காலிழந்து .. கண்ட கனவு பொய்த்து கதியிழந்து நிற்கும் நிலை … ஒல குரலெழுப்பி … உலகெல்லாம் சிதறிச் சென்றோம் … கேக்க நாதியில்ல .. நீதி சொல்ல யாருமில்ல … சூழ்ச்சிக்கு இரையானோம் … சோதனையின் களமாணோம்.. வீழ்ச்சியுற்ற வேதனையில் … எழுச்சியுர மறந்து விட்டோம் .. எதிரியின் சூழ்ச்சியில .. இணைந்துகொள்ள மறந்து போனோம்… தாயகம் தரிசாக … தலைமுறைய தொலைத்து நின்றோம் ?.. மண்ணுக்குள்ள வாழுகின்ற மறவர்கள மறந்துவிட்டோம் … மண்ணுரிமை காக்க தவறி அடிமையாய் வாழ பழகிவிட்டோம்…. -காந்தன்... read more

இன்னும் சில நாட்கள்…..

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்…. நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்…… என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். “நான் இறந்துவிட்டேனா?” நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும். இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். “ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்” என் மனைவி அறையில் நுழைந்தாள். “நீ அழகாக இருக்கிறாய் ” என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. “கடவுளே!” நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்! திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். “தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி. ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். .. என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. ” இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்றேன் முதன் முறையாக. முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.... read more

திலீபன்

திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம் எழுதிய கவிதை, தமிழில் : ஃபஹீமாஜஹான் திலீபன் ………………………………………………………………… அனேகமானோர் கடந்து செல்வர் காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட உனது நினைவுகளை யாருக்கும் தெரியாமல் அவற்றைப் பொறுக்கிக் கொள்கிறேன் உன்னதமெனப் போற்றும் கொள்கையொன்றுக்காக மனிதனொருவனால் வாழ்வினை உதறியெறிந்திட முடியுமா வீரன்தான் அவன் என்றுமே எனக்கு பெயர் , ஊர் அடையாளஅட்டை எதுவும் தேவையில்லை ‘தேசப் பிரேமி’களின் கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர் திலீபன்… இன்றைய இராப்பொழுதும் உனது நினைவுகளை உள்ளத்தினுள்ளேயே சிறைப்படுத்திக் கொள்கிறேன் யாருமறியாமல் (இக் கவிதை மறுபாதி இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. நன்றி –... read more

பர்ஜானா – சிறுகதை

பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள். பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள். மாதமாதம் சரியாக தனது அம்மாவிற்கு பணம் அனுப்பி விடுவார்கள். மாதம் முதல் வாரம் ஆகிவிட்டால் பர்ஜானாவை  வெஸ்டர்ன் யூனியனில் பார்க்கலாம். பர்ஜானா தனது மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதனால் தனது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்ததால் புதிய, புதிய சேலைகளை வாங்குவது, விதவிதமாக சாப்பாடு ஆக்கி சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக இருப்பார். தனது பையன்கள் வெளிநாட்டில் இருந்து எனக்காக பணம் அனுப்புகிறார்கள் அதனால்தான் நான் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பலரிடமும் பெருமையடித்து கொள்வார். தான் வாங்கிய புதிய சேலையை தனது தோழி பாத்திமாவிடம் காட்ட அவர் வீட்டிற்கு செல்கிறார். “என்ன பாத்திமா எப்படி இருக்க” “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க” “எனகென்ன சூப்பரா இருக்கேன்” “புது சேலை வாங்கினேன், உன்கிட்ட காட்டலாம்னு வந்தேன்”. “அப்படியா எடு பாப்போம்” “அட நல்லா இருக்கே” “யாரு உன் பையன் அனுப்பினானா” என்றால் பாத்திமா. “இல்லடி. பையன் அனுப்புன பணத்துல இங்கேதான் வாங்கினேன். அவன் அனுப்புன பணத்தை வைச்சி நான் என்ன செய்யபோறேன்”. அதான் இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்றேன்”. சந்தோசமா இருக்கேன்” “சரி பாத்திமா, சாப்டாச்சா” “இல்லடி இப்பதான் கஞ்சி காய்ச்சிகிட்டு இருந்தேன் நீ வந்துட்ட” “கஞ்சியா? ஏன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்லே” “சேலைய பாரு, என்னடி சேலை இது, ஒரு நல்ல சேலை கட்ட வேண்டியதுதானே உன் பையன் தான் சம்பாரிக்கிறான்லெ” “உன் பையன் மாதிரி என் பையன் என்ன வெளிநாட்டுலேயா சம்பாரிக்கிறான். அவன் இங்க சம்பாரிக்கிற பணம் குடும்ப செலவுக்கே சரியாகி விடுகிறது”, “என்ன செய்ய என் பையன் வருசத்துக்கு இரண்டு, மூன்று சேலை எடுத்து தரான், எனக்கு அதுவே போதும்”. “சரி பாத்திமா நான் வரேன்” டைம் ஆகிடுச்சி” என்று தனது வீட்டிற்கு சென்றார் பர்ஜானா. வீட்டிற்கு நுழைந்தவுடன் போன் ஒலித்தது. “ஹலோ யாருங்க” “நாந்தாம்மா காமில், நல்ல இருக்கீங்களா” “நல்லா இருக்கேன் காமில், நீ எப்படி இருக்கே” “நான் நல்ல இருக்கேன் மா, வர பக்ரீத் க்கு ஒரு மாதம் லீவு கிடைச்சிருக்கு இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான் “சரிப்பா” என்று போன் வைத்து விட்டார் பர்ஜானா. இன்னும் இரண்டு நாளுல்ல பையன் வருவதால், அவனுக்கு பிடித்த பலகாரங்கள் செய்வது, வீட்டை கழுவி சுத்தம் செய்து என்று தனது வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார். இரண்டு நாள் கழித்து விடியற்காலை உதயமானது. “அம்மா” என்று சப்தமிட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது. “கதவை திறந்தார்  பர்ஜானா. வெளியே காமில். “அம்மா எப்படி இருக்கீங்க பார்த்து எத்தன நாள் ஆச்சு”, “நீ எப்படி ராசா இருக்கே” எல்லோரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். “ஏம்பா பசங்கள அழைச்சிட்டு வரல”. “பசங்களுக்கு ஸ்கூல் லீவு கிடைக்கல”. அதான் தம்பி வீட்டுள்ள விட்டுட்டு வந்திருக்கேன்”. அவன் பார்த்துக்குவான். “அப்படியா சரி, பசங்கள பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன். அடுத்த தடவை வரும்போதாவது கூட்டிட்டுவாப்பா” காமில் வந்த ஒரு மாதம் விறுவிறு வென்று ஓடியது. காமிலும் அவனுடைய சில வேலைகளை முடித்துக் கொண்டான். உண்மையில் அம்மாவை சந்திப்பதற்காக மட்டுமல்ல வேறு சில வேலையும், நோக்கமும் அவனுக்கு இருந்தது. “அம்மா இந்தாங்க, இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. வச்சிகுங்க”. என்று கொடுத்தான் காமில். வாங்கி வைத்துக் கொண்டார் பர்ஜானா. இதை பார்த்துக்கொண்டிருந்த காமிலின் மனைவிக்கு கோவம் தலைக்கேறியது. காமிலை ரூமுக்கு அழைத்து திட்டினால். “எதுக்கு உங்கம்மாவுக்கு இவ்ளோ பணம், அதான் மாசமாசம் அனுப்புரீங்கள்ள அப்பறமென்ன” என்று பொரிந்து தள்ளினாள். “இல்லைடி, அவங்களுக்கு யாரு இருக்கா, இவ்வளவு பணத்த அவங்களால செலவு பண்ண முடியாது. எப்படியும் அவங்களுக்கு... read more

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும் ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும் மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும் வயல்களில் வசந்தங்களும்... read more

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

http://puthiyamalayagam.blogspot.com/ “எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை” – இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல். ஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் ‘கேச­ரி’க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர். ஆம்! புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு. ஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன. அடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள். இந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. இக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர். வள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள். அரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள். “யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்” என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர். பி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார். “நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது. 2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது. தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை. நாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள். நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது” என்றார். எஸ்.சரோ­ஜினி(66) என்பவர் கூறு­கையில், “நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள். வேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்” என்றார். அரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது. அதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும். அவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர். தோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும்... read more

கமலினி மீண்டும் பிறப்பாள்!

கமலினி மீண்டும் பிறப்பாள்! http://www.nirshan.blogspot.com அந்தச் செய்தி – என் இமைக்கதவுகளை தாழிடச் செய்து கண்ணீருக்கு வழிவிட்டது! ஆயிரம் அசுரபலம்கொண்ட களிறுகளால் குற்றுயிராய் கிடத்தப்பட்டதுபோல காரிருள் சூழ்ந்த பெருவெளியொன்றில் விளையாட்டுக்குக் கூட எழுந்து பறக்க முடியாத ஊனப்பறவையாய் நான்! ஆயாசமாகிப்போன உடலைச் சுமந்துகொண்டு நினைவுகளோடு பயணிக்கிறேன்..! தமிழை ஆவர்த்தனமாய் பேசும் அழகு அவளுக்கு! இயல் – உயிர் இசை – மூச்சு நாடகம் – மெய் அவளுக்கு! இலகுமொழியில் மழலை கொஞ்சும் பண்பு அவளுக்கு! எப்போதும் பூத்திருக்கும் மலர் வதனம் அவளுக்கு! காலம் எத்தனைக் கொடுமையானது? கலையோடு வாழ்ந்த கமலத்தை உதிரச் செய்தது! காலன் எவ்வளவு பொல்லாதவன்? பாசத்தோடு பழகியவளுக்கு பாசக்கயிறெறிந்தான்! பிரம்ம கமலமல்ல அவள் ஆண்டுக்கொருமுறை பூப்பதற்கு! இது பேரிடைவெளி! நினைவுகளைக் கொண்டே நிரப்பமுடியும் அவள் கலைநளினங்களை எண்ணிச் சிலாகித்த மனதில் மௌனம் பரந்திருக்கிறது! அவள் அமைதியாய் உறங்குகிறாள்..! ஆயிரம் கலைக்கனவுகளை அடைகாத்தபடி! இறைவா – என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்! அவள் மீண்டும் பிறக்க வேண்டும் – என்ற பிரார்த்தனைகளோடு! ஆம்! கமலினி – மீண்டும் பிறப்பாள்! -இராமானுஜம்... read more

​தாமரைக் குளம் அங்குரார்ப்பணமும் மகளிர் கிரிக்கெட் போட்டியும்

... read more

விடியலை நோக்கி

அழகான வீட்டின் முன்னாடி இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து பூக்களின் மணம் கலந்த சுகமான காற்று வேதாவின் நாசியைத் தீண்டியது. காலை பரப்பரப்பு ஓய்ந்த இந்த அமைதி, பழக்கம் என்றாலும், இன்று வேதா மனதில் ஒரு சலிப்பும் வெறுமையும் சூழ்ந்தது. வேதாவின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இது நியாயம் என்று தான் தோன்றும். வேதா பயந்த சுபாவம் உள்ளப் பெண். பிறந்த வீட்டில் சுதந்திரம் இல்லாமல், ரொம்பக் கண்டிப்புடன் வளர்ந்தவள். டிகிரி முடிக்கும் முன்பே 19வயதிலையே அரவிந்த் உடன் திருமணம். திருமணத்திற்குப் பிறகாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்ததில் விழுந்தது மண். அரவிந்த் பார்க்க நன்றாக இருப்பான் பெரியப் படிப்பு, நல்ல வேலையும் கூட. ஆனால் ரொம்ப முன்கோபம், அகம்பாவம், ஆண் என்ற மமதை இதெல்லாம் எப்போதும் அவனுடன் இருப்பவை. திருமணம் ஆன நாளிலிருந்து இதோ இன்று வரை, 30வருடமாக வேதாவின் பொழுது 4மணிக்கே ஆரம்பித்துவிடும். அரவிந்துக்கு கடவுள் பக்தி, பூசை இதில் எல்லாம் விருப்பமும், நம்பிக்கையும் அதிகம். விடிகாலை எழுந்து, ஆபீஸ் போகும் முன்பு 2மணி நேரம் கடவுளிடம் உரையாடி விட்டுத்தான், செல்வான். வேதாவும் பிடிக்கிறதோ இல்லையோ கூடவே எழுந்து எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும். கூடவே தேவையான சிற்றுண்டியும் தயார் செய்வாள். ஆனால், அரவிந்தோ, தன்னை நம்பி வந்த மனைவி இடம் குறைந்தபட்ச அன்பையோ மதிப்பையோ காட்டத்தெரியாதவன். இவனுக்கு பூசை சாமி எல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது. மனைவி என்பவள் தன் ஆளுமையில்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வர்க்கத்தில் அரவிந்தனும் ஒருவன். வேதாவிற்கு என்று ஒரு விருப்பு, வெறுப்போ, பேச்சு சுதந்திரமோ கிடையாது. வேதாவிற்கு பாட்டில் மிகவும் ஈடுபாடு, நன்றாக பாடவும் செய்வாள். கச்சேரி போகும், கேட்கும் பழக்கமுள்ள அரவிந்த் இதுவரை அவளைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை. “நீ பாடினால் கதவிடுக்கில் மாட்டிய எலி போல் இருக்கு, தயவு செய்து என் முன்னால் பாடதே”, என்பான். ஆபீஸ், மற்றும் friends இவர்களிடம் எல்லாம் கலகல என்று பழகுபவன் மனைவியை மட்டும் ஒரு அடிமை போல்தான் நடத்துவான். வேதாவிற்கு கைவேலை painting எல்லாம் ரொம்ப நன்றகத் தெரியும். ஆனால், “நீ என்ன கண்காட்சியா வைக்கப் போகிறாய்?” என்பான். ஒருவரின் எந்த சொல்லோ, செயலோ, நமக்கு வருத்தமும், கஷ்டமும் தருகிறதோ, அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டவள் வேதா. எல்லோரிடமும் ரொம்பவும் நட்புடன் அன்புடனும் பழகுபவள். உறவினற்கோ, நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உதவி செய்வதிலும், உடல் நிலை சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கும் செவிலியரைப் போல் துணையாக இருப்பதிலும் முதல் ஆளாக இருப்பாள். ஆனால் கணவருடன் இதுவரை ஒரு ஆபீஸ் பார்ட்டியோ, நண்பர்கள் வீடோ போனதில்லை. இப்படி இருந்தும் வேதாவுக்கு கணவனிடத்தில் அன்பு இருக்க தான் செய்தது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உண்டு. மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, தனக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தாரோ என்று வேதா நினைப்பதுண்டு. இன்று அவன் திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கான். அப்பப்போ போனில் பேசுவதோடு சரி. அவனாவது மனைவியை நல்லபடியாக வைத்திருக்கானே என்று தோணும். வேதாவும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டாள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இவளுக்கென பொறுப்பெல்லாம் முடிந்து, கவலை இல்லாத வாழ்க்கை என்றுதான் தோன்றும். ஆனால் வேதாவிற்கு தான் தெரியும், ஒரு நாள்கூட தான், தனக்காக வாழ்வில்லை என்று. சாப்பாடு விஷயத்தில்கூட கணவனது விருப்பம்தான். சரி, வீட்டில்தான் இப்படி என்றால், என்றேனும் அத்திப் பூத்தாற்போல் ஹோட்டல் சென்றால் அங்கும், அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்து விடுவான். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கு உள்ள மெனோபாஸ் கஷ்டத்திலும், அவனது தேவையையோ சௌகரியத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில்கூட கணவனின் அன்பும், அனுசரணையும் அவளுக்கு கிடைக்கவில்லை. கூடப் பிறந்தவர்களும், பெற்றோரும் அரவிந்த் குணம் தெரிந்து கொஞ்சம் ஒதுங்கியேதான் இருப்பார்கள். வேதாவிற்கு தன் கணவன் எப்படி இருந்தாலும், அனுசரித்து போவதுதான் நல்லது என்று எண்ணுபவள். இருந்தும், மற்ற கணவன், மனைவியைப் பார்க்கும் போது ஒரு ஏக்கம்... read more

எங்கே நடந்தது தவறு?

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடாலென்று கீழே வண்டியோடு சாய்ந்தாள். எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர். கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹாண்ட்பேக் டேபிள்மேல் வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிஷன் கேட்டாள். பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது. “இது யாரும்மா?” கீதா கேட்டாள். “இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம்.. ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்.” “விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளு இல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான்.. இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சினையைக் கவனிக்கறேன்.” “எப்படியோ தாயி அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பிச்சிருக்கார். நிச்சயம் ஒரு வழி பொறக்கும்.” கீதா கிளம்பினாள். பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள். கம்பெனி முதலாளிதான் பேசினார். பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக்கொணடாள். அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள். அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞ்சினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞ்சினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள். “சார் உங்க கணக்கில பணம் வரவு வச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க.” “சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்.” என்றார் அவர். அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே... read more

என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடி என் வீட்டு கண்ணாடியில், என் உருவம் தேட.. உன் முகம் காண்கிறேன், இது மந்திர கண்ணாடியா? இல்லை, ஒரு முறை உன்னை கண்டதனாலோ, இவனும் என் போல, உலகம் மறந்து விட்டான், கடமை தவறி விட்டான்.. நாளை, ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில், கணம் தாங்காமல் உடைந்து போவானோ? -கவி... read more

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனில் ஆற்றிய சிறப்புரை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய... read more

“றோவும்” இலங்கை அரசியலும்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்குவந்துவிடும் எனலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிருஸ்டியும் மகிந்த யுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து மைத்திரியுகத்தினை தொடக்கி வைத்தவருமாகிய சந்திரிக்காவும் மைத்திரிக்கு எதிரான ஒருநிலைப்பாட்டுடன் லண்டன் சென்று திரும்பி தற்சமயம் வந்துகொண்டிருக்கிறார். ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியினை தொடர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையினை மஹிந்த இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த58 இலட்சம் வாக்குகள் உண்மையில் மக்களால் விரும்பி அளிக்கப்பட்ட வாக்குகளா? அல்லது முழு அரச இயந்திரங்களையும் பயன்படுத்திப் பறிக்கப்பட்டவாக்குகளா? என்பதற்கான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க மஹிந்தவுக்கு எதிராக விழுந்த 62 இலட்சம் வாக்குகளும் மைத்திரியின் தனிவாக்குகள் என்று கூறமுடியாது. இங்கேதான் ஒரு விடயத்தினை உற்று நோக்கவேண்டும். ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி மைத்திரிஅணி, ஐ.தே.க, ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகமக்கள் முன்னணி, ஜே.வி.பி,த.தே.கூ என பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எடுத்த வாக்குகளே 62 இலட்சம் ஆகும். ஆனால் மஹிந்த பெற்ற வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றவாக்குகள். இன்று ஈ.பி.டி.பி யினரை விட ஐ.ம.சு.கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வெற்றிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்டன. தென்னிலங்கை சிங்களக் கட்சியினுடைய கூட்டினை வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்கள் விருப்பவில்லை என்பதனை உணர்ந்து கொண்டும், அத்துடன் தமது ஆதரவாளர்கள், மக்கள் ஆகியோரிடையே ஏற்படுத்திக் கொண்ட கருத்துக் கணிப்புக்களும் டக்ளஸ் தேவானந்தாவை தனித்து தேர்தலில் களம் இறங்க வைத்துள்ளது. காலாகாலமாக சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சிங்களத்துடன் ஒரு அவதானமாகவே பழக விரும்புகின்றனர். இதன் காரணமாக சிங்களத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பியினை மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக கடந்த தேர்தல்களில் தோற்கடித்துள்ளார்கள். தற்சமயம் டக்ளஸ் தேவானந்தா யாழ்மாவட்டத்தில் வீணைச்சின்னத்தில் தனது கட்சியில் போட்டியிடுவதனால் 7 சீட்களில் ஒன்றினுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. மீதி 6 சீட்களுக்கும் கடும் போட்டி நிகழலாமெனக் கூறப்படுகின்றது. விகிதாசாரத் தேர்தல் முறையில் இத்தேர்தல் நடைபெறுவதால் மக்கள் வாக்களிப்பு வீதம் வெற்றிதோல்வியில் கூடியளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த எதிர்ப்பு அலை ஒன்று யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிகம் வீசினாலும் வெற்றிலைக்கு சுமார் 75,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது யாருடைய வாக்கு என்பதனைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வடமாகாணசபை தேர்தல் போன்றதொரு வாக்குப்பதிவு நடைபெறுமாயின் கட்சிகள் மிக அதிகம் வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும். வாக்குகள் கட்சிகள் சார்ந்து பிரிகின்ற போது சொற்பவாக்குகளைப் பெற்றவர்களும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடிய வாய்ப்புள்ளது. த.தே.கூவில் மிக முக்கிய தலைவர்களாகப் போட்டியிடுபவர்களில் மாவை, சித்தார்த்தன், சுரேஸ், சிறிதரன், சுமந்திரன், சம்பந்தன், பொன் செல்வராசா, அரியநேந்திரன், யோகேஸ்வரன், அடைக்கலநாதன், சிவசக்திஆனந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் பலருடைய வேலைத்திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் போதாது என்ற குறைபாடு உள்ளது. கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்ற குறைபாடொன்றும் உள்ளது. ஒட்டு மொத்த இலங்கையர்களும் ஜனவரி 8 இல் எவ்வாறு ஒரு மாற்றத்தினை கொண்டுவந்தாhர்களோ அதே போல ஆகஸ்ட் 17 லில் ஒரு பெரிய மாற்றத்தினை இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்துவார்கள் என்பது வெள்ளிடைமலை. மஹிந்தவை அகற்றி மைத்திரியைக் கொண்டுவந்த மக்கள் மீண்டும் மைத்திரியைத் தர்மசங்கட நிலைக்குத் தள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மைத்திரி ஆட்சிக்கு பக்கபலம் சேர்ப்பார்கள். ஆகவே வெற்றிலை மீண்டும் துளிர்க்கலாம். தென்னிலங்கையில் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் மைத்திரி-மஹிந்த கூட்டு எடுபடுமா? என்ற கேள்வி ஒன்றுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பல தேர்தல்களில் ஐ.தே.க. வுக்கு வெள்ளையடித்தார்கள். ஐ.தே.கவின் உதவியுடன் தான் மைத்திரி மஹிந்தவை வென்றார். இம்முறை இதே உத்தியை வைத்துத்தான், இருவரும் சேர்ந்து மீண்டும் ஐ.தே.கவின் முகத்தில் சாணியடிக்கத் தயாராகிவிட்டனர். மைத்திரி-மஹிந்த இருவரும் ஸ்ரீ.ல.சு,க யின் அடிப்படைவாதிகள். இந்தக்கட்சியின் தூண்கள். வடமத்திய மாகாணத்தில் தனக்கென ஒரு இடத்தினை... read more

உலகின் தொன்மொழி தமிழுக்கு பேராபத்து!

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது. சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை. இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் ‘கிரந்த எழுத்துகள்’ எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும். 1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன. கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம். இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே. சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது – உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல. ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன. மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி. 2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும். ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும், சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை. ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச் சேர்த்தியம் (வாந ரு—€உழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக... read more

« Previous Entries

top