search
top
Currently Browsing: Uncategorized

வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த பறையிசைப் பயிற்சி

மணி    ஶ்ரீகாந்தன் பறையிசை பயின்ற சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்தவை இங்கே உங்கள் பார்வைக்காக…. ஆதி தமிழன் கண்டுபிடித்த ஒரு அற்புதமான தொலைத்தொடர்பு சாதனம்தான் பறை. இன்று பாவனையில் உள்ள போன், செல்போன், வாட்சப், வைபர், ஸ்கைப் என்பனவற்றுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் நாம் அந்த கருவியை கௌரவப்படுத்தாமல், சாதிய ரீதியாக ஒடுக்கி வைத்திருக்கிறோம். தமிழ் வாத்தியக் கருவிகளின் தாயாகத் திகழும் பறை அந்தக் காலத்தில் மருத்துவ ரீதியான ஸ்டெதஸ்கோப்பாகவும் செயல்பட்டிருக்கிறது. மரணம் ஒன்று சம்பவித்து விட்டால் அதை உறுதிப்படுத்தவே பறை இசைத்தார்களாம். பறைக்கு அந்த இறந்த உடல் ஆடவில்லை என்றால் அந்த மரணம் உறுதிசெய்யப்பட்டு விடும். ‘செத்த மாட்டு தோலுரித்து – வீரக்கா செவிட்டி அடிக்கையிலே – வீரக்கா சத்தம் கேட்டு எழுந்துக்கல – வீரக்கா சவக் குழிக்கு ஆளனுப்பு…’ என்று பறை இசைக்கலைஞர் மணிமாறன் தனது மறுவாசிப்பு நூலில் பாடலாக பதிவு செய்திருக்கிறார். இப்படிப் பெருமைப்பட்டு நாம் கொண்டாட வேண்டிய வாத்தியக் கருவி தீண்டத்தகாத வாத்தியமாக மூலையில் முடங்கிக் கிடப்பது வேதனை தந்தாலும், சில பகுத்தறிவுவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மறுவாசிப்பில் ஆர்வம் கொண்டோரினால் சாதி வேலியை உடைத்து பறை முழங்கவும் முடிகிறது என்பது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அண்மையில் நம் நாட்டில் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட மூன்று இடங்களில் பறை இசைப்பயிற்சி முகாமை யாழ். என்டர்டைமன்ட் அமைப்பு வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த புத்தர் கலைக்குழுவினரின் பயிற்சி நெறியில் ‘பறை விடுதலைக்கான குரல்’ என்கிற ஒரு வெளிநாட்டு அமைப்பினரின் அனுசரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் கலந்து பயிற்சியை நிறைவு செய்திருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்விலும் கலை நிகழ்ச்சிகளோடு பயிற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களை புத்தர் கலைக்குழுவின் தலைவர் மணிமாறன் வழங்கினார். அதோடு பறை இசைக்காக சிறப்பாக களப்பணியாற்றியவர்களுக்கு புத்தர் கலைகுழுவின் ‘தொல்லிசை சுடர் – 2016’ என்ற விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜோசுவா, சார்ள்ஸ் சாலினி இசையமைப்பாளர் ப்ரியன், மலையக பறை இசைக்கலைஞர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களாவர். பயிற்சியை திறம்பட நடாத்திய யாழ். என்டர்டைமன்ட்  அமைப்பின் இயக்குனர் சார்ள்ஸ் சாலியினிடம் பறை இசை வகுப்புகள் பற்றி வினவினோம். “ரொம்பவே சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் மணிமாறனும் அவரோடு வந்திருந்த சகோதர்களும் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி நெறியை வழங்கியிருந்தார்கள். ‘தாரை தப்பட்டை’ படத்தின் தாக்கம்தான் நீங்கள் பறை இசையை இங்கே செய்வதற்கு காரணம் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், அது இல்லை காரணம். தாரை தப்பட்டை இப்போதுதான் ரிலீஸானது. எனக்கு பறை இசை பயிற்சி நடாத்த ஐடியா இரண்டு வருசத்திற்கு முன்னரேயே வந்துவிட்டது. மணிமாறனை இரண்டு வருடங்களுக்கு முன்பு யாழில் சந்தித்து பயிற்சி வகுப்புப் பற்றி உரையாடி இருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது” என்று சாலினி மனசு நிறைந்த பூரிப்போடு பேசுகிறார். யாழ். என்டர்டைமன்ட் என்கிற அமைப்பின் மூலமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக கலைப்பணிகளையும், சமூக சேவைகளையும் சாலினி சார்ள்ஸ் செய்து வருகிறார். அமைப்பின் நிறைவேற்று இயக்குனராக சாலினியின் கணவர் ப்ரியன் பணியாற்றுகிறார். அவரோடு பாரம்பரிய கலைக்குழுவின் இணைப்பாளராக துஷிதரன், சமூக சேவை இணைப்பாளராக தர்ஷிதன் மார்கண்டு உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். “எங்கள் அமைப்பின் ஊடாக ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவைகளை தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். ஆனாலும் பறை இசை நடனப் பயிற்சி முகாம் நடத்தியதில் ஒரு பேரானந்தம் இருக்கிறது. பறை பயிற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து பறை பயின்றார்கள். இதில் முக்கியமாக, யாழ்ப்பாணத்தில் இருபதுக்கும் அதிகமானோரும், வவுனியாவில் சிறுவர்கள் பெருவாரியாகவும் பறை பயில வந்திருந்தார்கள். திருகோணமலையில் முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டது ஆச்சரியம் அளித்தது. யாழ்ப்பாணத்திலும் பெண்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு திருநங்கையும் கலந்து கொண்டிருந்தார். திருகோணமலையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜனார்த்தனன் பறை பயில வந்திருந்தது... read more

மீண்டும் அகதி வாழ்க்கை வேண்டாமே…!

உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட 30-35 வருடங்களைத் தொடுகின்றது. தமிழகத்தில் 100 இற்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பல காலகட்ட இடம்பெயர்வுகளால் சென்றவர்கள் பலருக்கு நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதே தெரியாத நிலைமை. இன்னும் சிலர் சொந்த மண்ணின் வாசனை அறியாதவர்கள். முப்பதாண்டுகால யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள எம் உறவுகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்கள். சிலர் திரும்பி வந்துள்ளனர். மேலும் சிலர் திரும்பி வரவிரும்பினாலும் இங்கு வந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். சிறு வயதில் சென்றவர்கள் இன்று வளர்ந்து திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுவிட்டார்கள். இவர்களில் சிலர் திரும்பிவர விரும்பினாலும் வளர்ந்து அங்கேயே வேர்விட்ட இளைய சமூகத்தினர் மீண்டும் நாடு திரும்ப விரும்பாத நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இலங்கை – இந்தியா இடையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. தஞ்சம் புகுந்தவர்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லையென்றபோதும் அவர்களின் விருப்பத்தின் பேரில் அனுப்பி வைப்பது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. அத்தோடு, இந்திய மத்திய, மாநில அரசும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. இதற்கிடையில் அவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையிலேயே அவர்கள் நிலை என்ன? நாடு திரும்புவதை விரும்புகிறார்களா? இங்கு வந்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இப்படியான பல கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் அப்துல்லா புறம் ஈழத்தமிழர் முகாம் மக்களை தொடர்பு கொண்டோம். தாய் நாட்டை விட்டுட்டு எப்படி அந்நிய நாட்டில் வாழ்வது? ஒன்பது வயதில் இங்கு வந்தேன். இப்போது என் பிள்ளைகளுக்கு எட்டு வயதாகிவிட்டது. என்னுடைய மனைவி திருகோணமலையைச் சேர்ந்தவர். எங்கள் சொந்தங்கள் இன்னும் அங்கு வாழ்கிறார்கள்.அவர்களை நாங்கள் பார்க்க வேண்டும். இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் மட்டும்தான் தாய்நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். இந்த முகாமில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 100 குடும்பங்கள் மட்டுமே மீண்டும் இலங்கை வர விரும்புகின்றனர். இங்கேயே பிறந்து வளர்ந்த இளைய சமுதாயத்திற்கு இந்த சூழல் பிடித்து விட்டது. இன்னும் சொல்வதானால் இங்கு கிடைக்கும் கல்வி, தொழில் வாய்ப்பு அங்கு கிடைக்குமா என்ற சந்தேகம் அவர்களிடத்தில் மேலோங்கி இருக்கின்றது. என்னுடைய எண்ணப்படி என் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமானால் இலங்கைக்கு வர வேண்டும். எப்படியும் என் மூத்த மகனுக்கு 12 வயது வருவதற்குள் தாய்நாட்டிற்கு வந்துவிட வேண்டும் என்கிறார் முகாம் தலைவர் செல்வரத்தினம். இம்முகாமின் மகளிர் குழு உறுப்பினர் நந்தகுமாரி (32வயது)குறிப்பிடுகையில்; சொந்த மண்ணில வாழும் சுகமே தனி. பிறந்த மண்ணுக்கு வர யாருக்குத்தான் விருப்பம் இல்லை. இருந்தாலும், கொஞ்சம் பயமும் இருக்கிறது. இங்கு அகதிகள் என்ற அடையாளத்துடனே வாழ்கின்றோம்.கட்டின உடுப்போடு இங்கு வந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில பொருட்களெல்லாம் சேர்த்து வச்சிருக்கிறோம். மறுபடியும் அங்கு வந்தால் இதையெல்லாம் கொண்டுவர முடியாது. இங்கு இன்னமும் குடியுரிமை இல்லை. ஆனால் பயமில்லாமல் இருக்கின்றோம். வீட்டை விட்டு தைரியமாக வெளியேறுகின்றோம். தினமும் செத்துச் செத்து பிழைக்க வேண்டிய தேவையில்லை. வாழ்க்கை முழுவதும் அகதிகளாக வாழ்வதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை. சரோஜா (47வயது) குறிப்பிடுகையில்; 2007ஆம் ஆண்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பிள்ளைகளுடன் இங்கு தஞ்சமடைந்தோம். இன்று என் கணவர் இறந்து 18நாட்கள்தான் ஆகிறது. அவரது உடலைக்கூட சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியவில்லை. எனக்கு 8 பிள்ளைகள். அத்தனையும் ஆண்கள்.அவர்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். எங்களுடைய நிலைமை அவர்களுக்கு வரக்கூடாது. அங்கு வந்து மறுபடியும் அள்ளிக் கட்டிக்கொண்டு அகதியாகும் நிலை எங்கள் பிள்ளைகளுக்கும் வேண்டாம்.இங்கு அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றது. வெளியில போறதென்றால் அனுமதி எடுத்துக்கிட்டு போகலாம். சொந்த வீடு, சொத்து,நிலபுலம் இல்லாவிட்டாலும் நிம்மதியா படுத்து எழும்புறோம். இதுவே எங்களுக்கு போதும். முகாம் வாழ்க்கை பழகிப்போன ஒன்றாக... read more

தாமரைக் குளம் இம்முறை இரு வலைப்பதிவர்களுக்கு விருது!

தாமரைக் குளம் வலைப்பதிவர் சங்கத்தின் 2015ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கொழும்பு கிருளபனையில் அமைந்துள்ள ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை பாராளுமன்றின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்கேற்றார். நெலும்யாய என்ற சகோதர மொழி பதிவர் சங்கத்தில் பல விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதன் தமிழ் பிரிவான தாமரைக் குளம் வலைப்பதிவர் சங்கத்தின் சார்பில் 2015ம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பதிவர் விருதினை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டார். அதுபோல இரண்டாம் இடத்தை அருண் வெங்கடேஸ் பெற்றுக் கொண்டார். இவ்விருவரும் தொடர்ச்சியாக வலைப்பதிவு செய்து வருவதுடன் சிறுகதை, கவிதை துறைகளில் சிறப்பாக எழுத்தாற்றலை வௌிப்படுத்தி வருகின்றமை... read more

‘தாமரை குளம்’ விருது விழா இன்று!

‘தாமரை குளம்’ வருடாந்தம் நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான விருது வழங்கும் விழா இம்முறையும் சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாராஹென்பிட்டியில் உள்ள ஊடகத்துறை அமைச்சில் இந்நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய நிகழ்வில் முதல் முறையாக தமிழ் வலைப்பதிவாளர்கள் இருவர் விருது பெறவுள்ளமை சிறப்பு அம்சமாகும். மேலதிக விபரங்களை நிகழ்வின் பின்... read more

top