search
top
Currently Browsing: சிறுகதை

மட்டக்குச்சி – விக்கிவிக்னேஷ்

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ? அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும். தேயி லைத் தட்டும் மட்டுக்குச்சியின் உயரத்துக்கே வளர முடிந்த இந்த வீட்டுக் கூரையுள், கூனிகுறுகி வளராத எங்கள் காலத்தை, பிள்ளையின் வழியிலாவது வளர்த்துவிட பாடாதபாடு படுகிறேன்… ‘ஆறு மணி ஆகிருச்சி, இந்த புள்ள இன்னும் எழும்பாம இருக்கு… மலரு…. மலரு… எழும்பும்மா…. ஸ்கூலுக்கு நேரமாகிறிச்சி… – (நான்) ‘இன்னைக்கி மட்டும் வீட்டில இருக்கேம்மா…’ – (மலர்) ‘இப்படி சொல்லிதானே நேத்தும் வீட்டில இருந்த… இன்னைக்கு மட்டும்தானே ஸ்கூல், நாளைக்கு லீவுதானே.. இன்னைக்கு ஒருநாளைக்கு போய்ட்டு வாம்மா… எனக்கும் பெரட்டுக்கு நேரமாச்சி….’ – நான் இந்த பிள்ளையின் கனவை நான்தான் காண்கிறேன்… இவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. இவளை எப்படியாவது கரை சேர்த்துவிடத்தான், என் நாட்களை எல்லாவற்றையும் கரைத்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் அவள் இப்படி தூங்குவதை பார்க்க எரிச்சலாக இருந்தது… அடித்து எழுப்புவதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. பெரட்டு களத்தில் கொஞ்சம் சுணங்கினாலும் வேலை இல்லை, அரைபேரு என்று என் கனவுக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளையே கேட்க வேண்டி வரும்… எங்களை நாங்களே மட்டம் தட்டிக் கொள்ளும் வரிச்சிக்குச்சியை எடுத்து பிள்ளையின் பின்பக்கத்தில் நான்கு போட்டேன்… ‘எத்தன முறை சொல்றது உனக்கு.. நீ படிக்கனுதானே நா மாடா உழைக்கிறேன்… எழும்பி பொய்ட்டு பொறப்படு…’ – (நான்) அடி உதவுவதை போல எதுவும் உதவாது.. அம்மாவின் பேச்சை கேட்காமல், மட்டக்குச்சியின் பேச்சைக் கேட்டு எழுந்து போன மகளை பார்த்துக் கொண்டே அவளுக்கு கொடுத்த நான்கு அடிகளை எட்டாக நான் எனகே கொடுத்துக் கொண்டேன்.. காடு மலை ஏறி கடினமாகிப் போன என் கால்களுக்கே இத்தனை வலி என்றால், என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும்? மலைக்கு கொண்டு செல்ல கட்டி வைக்கப்பட்டிருந்த ரொட்டித்துண்டுகளை கூட எடுத்துச் செல்ல மனம் வரவில்லை. அம்மாவிடம் அவளை பாடசாலைக்கு அனுப்புமாறு கூறிவிட்டு பெரட்டுகளத்துக்கு ஓடினேன். எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமதம்தான்… ஆனாலும் சிலநேரங்களில் அந்த ஐயாமாருக்கு இரக்கம் வரும். இன்றும் வந்திருக்கிறது போலும், ஒன்றும் சொல்லாமல் என்னையும் சேர்த்து இன்னும் கொஞ்சம் பேரையும் ஏழாம் நம்பர் மலைக்கு போகசொன்னார். இருக்கும் மலைகளிலேயே ஏழாம் நம்பர் மலைதான் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இதில் ஏறி இறங்குவதற்குள் பாதி உயிர் பறிபோய்விடும். எல்லாம் என் பிள்ளையின் வயிற்றுக்கும், எதிர்காலத்துக்குமாக எண்ணி நடையை கட்ட வேண்டியதுதான்… சாரத்தை மடித்து தலையில் கட்டி தேயிலைக் கூடையை தலையில் மாட்டிக் கொண்டு நடையை கட்டும் போது… ‘ராஜேஸ்வரி…. எங்க ஓடுற…?’ என் பக்கத்துவீட்டு சரோஜா.. அவளும் ஏழாம் நம்பர்தான் போல… எனக்கு முன்னரே வந்துவிட்டாள். நானும் அவளும் முன்னர் பள்ளித் தோழிகள். ஐந்தாம் வகுப்போடு நான் நின்றுவிட்டேன். சரோஜா பத்தாவது வரை படித்தாள். இப்போது மலைத்தோழிகள்… ‘ஏன் ஒருமாறி இருக்க? எதும் பிரச்சினையா’ – (சரோஜா) ‘இல்லடீ.. காலையிலயே புள்ளய அடிச்சிபுட்டேன்… அதான் ஒரே கொடச்சலா இருக்கு…’ – (நான்) ‘ஏன்… ஸ்கூல் போகமாட்டடேனு கரைச்சகுடுத்தாளோ’ – (சரோஜா) ‘ம்ம்…’ – (நான்) ‘சரி விடுடீ… என்னமோ நாமெல்லாம் எந்தநாளும் ஸ்கூல் போன மாரி… ஆடிக்கு ஒருக்காலும் அம்மாசிக்கு ஒருக்காலுந்தான் நம்மலே ஸ்கூல் போனோம்… மறந்துட்டியா?’ – (சரோஜா) ‘அப்ப நம்மல மாதிரியே அவளயும் கொழுந்தெடுக்க விட சொல்றியா’ – (நான்) ‘நம்ப புள்ளைக வேற என்னத்த செய்ய போகுதுக… அஞ்சாவது படிச்ச நீயும் கொழுந்துதான் எடுக்குற, பத்தாவது படிச்ச நானும் கொழுந்துதான் எடுக்குறேன்.. உன் புள்ளமட்டும் என்னத்த செய்ய போகுது…?’ – (சரோஜா) ‘சீ… வாய மூடு…’ – (நான்) அந்த இடத்தில் எனக்கு வேறு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. அவள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இந்த தோட்டத்தில் படித்த யார்தான் இதைவிட்டு வெளியில் சென்று சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறார்கள். எல்லோரும் இதே வேலைதான். மிஞ்சி மிஞ்சி போனால் திருமணம்... read more

இன்னும் சில நாட்கள்…..

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்…. நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்…… என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். “நான் இறந்துவிட்டேனா?” நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும். இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். “ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்” என் மனைவி அறையில் நுழைந்தாள். “நீ அழகாக இருக்கிறாய் ” என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. “கடவுளே!” நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்! திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். “தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி. ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். .. என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. ” இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்றேன் முதன் முறையாக. முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.... read more

பர்ஜானா – சிறுகதை

பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள். பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள். மாதமாதம் சரியாக தனது அம்மாவிற்கு பணம் அனுப்பி விடுவார்கள். மாதம் முதல் வாரம் ஆகிவிட்டால் பர்ஜானாவை  வெஸ்டர்ன் யூனியனில் பார்க்கலாம். பர்ஜானா தனது மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதனால் தனது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்ததால் புதிய, புதிய சேலைகளை வாங்குவது, விதவிதமாக சாப்பாடு ஆக்கி சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக இருப்பார். தனது பையன்கள் வெளிநாட்டில் இருந்து எனக்காக பணம் அனுப்புகிறார்கள் அதனால்தான் நான் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பலரிடமும் பெருமையடித்து கொள்வார். தான் வாங்கிய புதிய சேலையை தனது தோழி பாத்திமாவிடம் காட்ட அவர் வீட்டிற்கு செல்கிறார். “என்ன பாத்திமா எப்படி இருக்க” “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க” “எனகென்ன சூப்பரா இருக்கேன்” “புது சேலை வாங்கினேன், உன்கிட்ட காட்டலாம்னு வந்தேன்”. “அப்படியா எடு பாப்போம்” “அட நல்லா இருக்கே” “யாரு உன் பையன் அனுப்பினானா” என்றால் பாத்திமா. “இல்லடி. பையன் அனுப்புன பணத்துல இங்கேதான் வாங்கினேன். அவன் அனுப்புன பணத்தை வைச்சி நான் என்ன செய்யபோறேன்”. அதான் இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்றேன்”. சந்தோசமா இருக்கேன்” “சரி பாத்திமா, சாப்டாச்சா” “இல்லடி இப்பதான் கஞ்சி காய்ச்சிகிட்டு இருந்தேன் நீ வந்துட்ட” “கஞ்சியா? ஏன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்லே” “சேலைய பாரு, என்னடி சேலை இது, ஒரு நல்ல சேலை கட்ட வேண்டியதுதானே உன் பையன் தான் சம்பாரிக்கிறான்லெ” “உன் பையன் மாதிரி என் பையன் என்ன வெளிநாட்டுலேயா சம்பாரிக்கிறான். அவன் இங்க சம்பாரிக்கிற பணம் குடும்ப செலவுக்கே சரியாகி விடுகிறது”, “என்ன செய்ய என் பையன் வருசத்துக்கு இரண்டு, மூன்று சேலை எடுத்து தரான், எனக்கு அதுவே போதும்”. “சரி பாத்திமா நான் வரேன்” டைம் ஆகிடுச்சி” என்று தனது வீட்டிற்கு சென்றார் பர்ஜானா. வீட்டிற்கு நுழைந்தவுடன் போன் ஒலித்தது. “ஹலோ யாருங்க” “நாந்தாம்மா காமில், நல்ல இருக்கீங்களா” “நல்லா இருக்கேன் காமில், நீ எப்படி இருக்கே” “நான் நல்ல இருக்கேன் மா, வர பக்ரீத் க்கு ஒரு மாதம் லீவு கிடைச்சிருக்கு இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான் “சரிப்பா” என்று போன் வைத்து விட்டார் பர்ஜானா. இன்னும் இரண்டு நாளுல்ல பையன் வருவதால், அவனுக்கு பிடித்த பலகாரங்கள் செய்வது, வீட்டை கழுவி சுத்தம் செய்து என்று தனது வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார். இரண்டு நாள் கழித்து விடியற்காலை உதயமானது. “அம்மா” என்று சப்தமிட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது. “கதவை திறந்தார்  பர்ஜானா. வெளியே காமில். “அம்மா எப்படி இருக்கீங்க பார்த்து எத்தன நாள் ஆச்சு”, “நீ எப்படி ராசா இருக்கே” எல்லோரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். “ஏம்பா பசங்கள அழைச்சிட்டு வரல”. “பசங்களுக்கு ஸ்கூல் லீவு கிடைக்கல”. அதான் தம்பி வீட்டுள்ள விட்டுட்டு வந்திருக்கேன்”. அவன் பார்த்துக்குவான். “அப்படியா சரி, பசங்கள பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன். அடுத்த தடவை வரும்போதாவது கூட்டிட்டுவாப்பா” காமில் வந்த ஒரு மாதம் விறுவிறு வென்று ஓடியது. காமிலும் அவனுடைய சில வேலைகளை முடித்துக் கொண்டான். உண்மையில் அம்மாவை சந்திப்பதற்காக மட்டுமல்ல வேறு சில வேலையும், நோக்கமும் அவனுக்கு இருந்தது. “அம்மா இந்தாங்க, இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. வச்சிகுங்க”. என்று கொடுத்தான் காமில். வாங்கி வைத்துக் கொண்டார் பர்ஜானா. இதை பார்த்துக்கொண்டிருந்த காமிலின் மனைவிக்கு கோவம் தலைக்கேறியது. காமிலை ரூமுக்கு அழைத்து திட்டினால். “எதுக்கு உங்கம்மாவுக்கு இவ்ளோ பணம், அதான் மாசமாசம் அனுப்புரீங்கள்ள அப்பறமென்ன” என்று பொரிந்து தள்ளினாள். “இல்லைடி, அவங்களுக்கு யாரு இருக்கா, இவ்வளவு பணத்த அவங்களால செலவு பண்ண முடியாது. எப்படியும் அவங்களுக்கு... read more

விடியலை நோக்கி

அழகான வீட்டின் முன்னாடி இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து பூக்களின் மணம் கலந்த சுகமான காற்று வேதாவின் நாசியைத் தீண்டியது. காலை பரப்பரப்பு ஓய்ந்த இந்த அமைதி, பழக்கம் என்றாலும், இன்று வேதா மனதில் ஒரு சலிப்பும் வெறுமையும் சூழ்ந்தது. வேதாவின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இது நியாயம் என்று தான் தோன்றும். வேதா பயந்த சுபாவம் உள்ளப் பெண். பிறந்த வீட்டில் சுதந்திரம் இல்லாமல், ரொம்பக் கண்டிப்புடன் வளர்ந்தவள். டிகிரி முடிக்கும் முன்பே 19வயதிலையே அரவிந்த் உடன் திருமணம். திருமணத்திற்குப் பிறகாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்ததில் விழுந்தது மண். அரவிந்த் பார்க்க நன்றாக இருப்பான் பெரியப் படிப்பு, நல்ல வேலையும் கூட. ஆனால் ரொம்ப முன்கோபம், அகம்பாவம், ஆண் என்ற மமதை இதெல்லாம் எப்போதும் அவனுடன் இருப்பவை. திருமணம் ஆன நாளிலிருந்து இதோ இன்று வரை, 30வருடமாக வேதாவின் பொழுது 4மணிக்கே ஆரம்பித்துவிடும். அரவிந்துக்கு கடவுள் பக்தி, பூசை இதில் எல்லாம் விருப்பமும், நம்பிக்கையும் அதிகம். விடிகாலை எழுந்து, ஆபீஸ் போகும் முன்பு 2மணி நேரம் கடவுளிடம் உரையாடி விட்டுத்தான், செல்வான். வேதாவும் பிடிக்கிறதோ இல்லையோ கூடவே எழுந்து எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும். கூடவே தேவையான சிற்றுண்டியும் தயார் செய்வாள். ஆனால், அரவிந்தோ, தன்னை நம்பி வந்த மனைவி இடம் குறைந்தபட்ச அன்பையோ மதிப்பையோ காட்டத்தெரியாதவன். இவனுக்கு பூசை சாமி எல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது. மனைவி என்பவள் தன் ஆளுமையில்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வர்க்கத்தில் அரவிந்தனும் ஒருவன். வேதாவிற்கு என்று ஒரு விருப்பு, வெறுப்போ, பேச்சு சுதந்திரமோ கிடையாது. வேதாவிற்கு பாட்டில் மிகவும் ஈடுபாடு, நன்றாக பாடவும் செய்வாள். கச்சேரி போகும், கேட்கும் பழக்கமுள்ள அரவிந்த் இதுவரை அவளைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை. “நீ பாடினால் கதவிடுக்கில் மாட்டிய எலி போல் இருக்கு, தயவு செய்து என் முன்னால் பாடதே”, என்பான். ஆபீஸ், மற்றும் friends இவர்களிடம் எல்லாம் கலகல என்று பழகுபவன் மனைவியை மட்டும் ஒரு அடிமை போல்தான் நடத்துவான். வேதாவிற்கு கைவேலை painting எல்லாம் ரொம்ப நன்றகத் தெரியும். ஆனால், “நீ என்ன கண்காட்சியா வைக்கப் போகிறாய்?” என்பான். ஒருவரின் எந்த சொல்லோ, செயலோ, நமக்கு வருத்தமும், கஷ்டமும் தருகிறதோ, அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டவள் வேதா. எல்லோரிடமும் ரொம்பவும் நட்புடன் அன்புடனும் பழகுபவள். உறவினற்கோ, நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உதவி செய்வதிலும், உடல் நிலை சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கும் செவிலியரைப் போல் துணையாக இருப்பதிலும் முதல் ஆளாக இருப்பாள். ஆனால் கணவருடன் இதுவரை ஒரு ஆபீஸ் பார்ட்டியோ, நண்பர்கள் வீடோ போனதில்லை. இப்படி இருந்தும் வேதாவுக்கு கணவனிடத்தில் அன்பு இருக்க தான் செய்தது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உண்டு. மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, தனக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தாரோ என்று வேதா நினைப்பதுண்டு. இன்று அவன் திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கான். அப்பப்போ போனில் பேசுவதோடு சரி. அவனாவது மனைவியை நல்லபடியாக வைத்திருக்கானே என்று தோணும். வேதாவும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டாள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இவளுக்கென பொறுப்பெல்லாம் முடிந்து, கவலை இல்லாத வாழ்க்கை என்றுதான் தோன்றும். ஆனால் வேதாவிற்கு தான் தெரியும், ஒரு நாள்கூட தான், தனக்காக வாழ்வில்லை என்று. சாப்பாடு விஷயத்தில்கூட கணவனது விருப்பம்தான். சரி, வீட்டில்தான் இப்படி என்றால், என்றேனும் அத்திப் பூத்தாற்போல் ஹோட்டல் சென்றால் அங்கும், அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்து விடுவான். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கு உள்ள மெனோபாஸ் கஷ்டத்திலும், அவனது தேவையையோ சௌகரியத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில்கூட கணவனின் அன்பும், அனுசரணையும் அவளுக்கு கிடைக்கவில்லை. கூடப் பிறந்தவர்களும், பெற்றோரும் அரவிந்த் குணம் தெரிந்து கொஞ்சம் ஒதுங்கியேதான் இருப்பார்கள். வேதாவிற்கு தன் கணவன் எப்படி இருந்தாலும், அனுசரித்து போவதுதான் நல்லது என்று எண்ணுபவள். இருந்தும், மற்ற கணவன், மனைவியைப் பார்க்கும் போது ஒரு ஏக்கம்... read more

எங்கே நடந்தது தவறு?

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடாலென்று கீழே வண்டியோடு சாய்ந்தாள். எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர். கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹாண்ட்பேக் டேபிள்மேல் வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிஷன் கேட்டாள். பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது. “இது யாரும்மா?” கீதா கேட்டாள். “இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம்.. ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்.” “விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளு இல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான்.. இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சினையைக் கவனிக்கறேன்.” “எப்படியோ தாயி அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பிச்சிருக்கார். நிச்சயம் ஒரு வழி பொறக்கும்.” கீதா கிளம்பினாள். பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள். கம்பெனி முதலாளிதான் பேசினார். பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக்கொணடாள். அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள். அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞ்சினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞ்சினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள். “சார் உங்க கணக்கில பணம் வரவு வச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க.” “சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்.” என்றார் அவர். அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே... read more

top