search
top
Currently Browsing: அரசியல்

மீண்டும் அகதி வாழ்க்கை வேண்டாமே…!

உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட 30-35 வருடங்களைத் தொடுகின்றது. தமிழகத்தில் 100 இற்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பல காலகட்ட இடம்பெயர்வுகளால் சென்றவர்கள் பலருக்கு நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதே தெரியாத நிலைமை. இன்னும் சிலர் சொந்த மண்ணின் வாசனை அறியாதவர்கள். முப்பதாண்டுகால யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள எம் உறவுகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்கள். சிலர் திரும்பி வந்துள்ளனர். மேலும் சிலர் திரும்பி வரவிரும்பினாலும் இங்கு வந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். சிறு வயதில் சென்றவர்கள் இன்று வளர்ந்து திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுவிட்டார்கள். இவர்களில் சிலர் திரும்பிவர விரும்பினாலும் வளர்ந்து அங்கேயே வேர்விட்ட இளைய சமூகத்தினர் மீண்டும் நாடு திரும்ப விரும்பாத நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இலங்கை – இந்தியா இடையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. தஞ்சம் புகுந்தவர்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லையென்றபோதும் அவர்களின் விருப்பத்தின் பேரில் அனுப்பி வைப்பது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. அத்தோடு, இந்திய மத்திய, மாநில அரசும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. இதற்கிடையில் அவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையிலேயே அவர்கள் நிலை என்ன? நாடு திரும்புவதை விரும்புகிறார்களா? இங்கு வந்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இப்படியான பல கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் அப்துல்லா புறம் ஈழத்தமிழர் முகாம் மக்களை தொடர்பு கொண்டோம். தாய் நாட்டை விட்டுட்டு எப்படி அந்நிய நாட்டில் வாழ்வது? ஒன்பது வயதில் இங்கு வந்தேன். இப்போது என் பிள்ளைகளுக்கு எட்டு வயதாகிவிட்டது. என்னுடைய மனைவி திருகோணமலையைச் சேர்ந்தவர். எங்கள் சொந்தங்கள் இன்னும் அங்கு வாழ்கிறார்கள்.அவர்களை நாங்கள் பார்க்க வேண்டும். இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் மட்டும்தான் தாய்நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். இந்த முகாமில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 100 குடும்பங்கள் மட்டுமே மீண்டும் இலங்கை வர விரும்புகின்றனர். இங்கேயே பிறந்து வளர்ந்த இளைய சமுதாயத்திற்கு இந்த சூழல் பிடித்து விட்டது. இன்னும் சொல்வதானால் இங்கு கிடைக்கும் கல்வி, தொழில் வாய்ப்பு அங்கு கிடைக்குமா என்ற சந்தேகம் அவர்களிடத்தில் மேலோங்கி இருக்கின்றது. என்னுடைய எண்ணப்படி என் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமானால் இலங்கைக்கு வர வேண்டும். எப்படியும் என் மூத்த மகனுக்கு 12 வயது வருவதற்குள் தாய்நாட்டிற்கு வந்துவிட வேண்டும் என்கிறார் முகாம் தலைவர் செல்வரத்தினம். இம்முகாமின் மகளிர் குழு உறுப்பினர் நந்தகுமாரி (32வயது)குறிப்பிடுகையில்; சொந்த மண்ணில வாழும் சுகமே தனி. பிறந்த மண்ணுக்கு வர யாருக்குத்தான் விருப்பம் இல்லை. இருந்தாலும், கொஞ்சம் பயமும் இருக்கிறது. இங்கு அகதிகள் என்ற அடையாளத்துடனே வாழ்கின்றோம்.கட்டின உடுப்போடு இங்கு வந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில பொருட்களெல்லாம் சேர்த்து வச்சிருக்கிறோம். மறுபடியும் அங்கு வந்தால் இதையெல்லாம் கொண்டுவர முடியாது. இங்கு இன்னமும் குடியுரிமை இல்லை. ஆனால் பயமில்லாமல் இருக்கின்றோம். வீட்டை விட்டு தைரியமாக வெளியேறுகின்றோம். தினமும் செத்துச் செத்து பிழைக்க வேண்டிய தேவையில்லை. வாழ்க்கை முழுவதும் அகதிகளாக வாழ்வதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை. சரோஜா (47வயது) குறிப்பிடுகையில்; 2007ஆம் ஆண்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பிள்ளைகளுடன் இங்கு தஞ்சமடைந்தோம். இன்று என் கணவர் இறந்து 18நாட்கள்தான் ஆகிறது. அவரது உடலைக்கூட சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியவில்லை. எனக்கு 8 பிள்ளைகள். அத்தனையும் ஆண்கள்.அவர்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். எங்களுடைய நிலைமை அவர்களுக்கு வரக்கூடாது. அங்கு வந்து மறுபடியும் அள்ளிக் கட்டிக்கொண்டு அகதியாகும் நிலை எங்கள் பிள்ளைகளுக்கும் வேண்டாம்.இங்கு அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றது. வெளியில போறதென்றால் அனுமதி எடுத்துக்கிட்டு போகலாம். சொந்த வீடு, சொத்து,நிலபுலம் இல்லாவிட்டாலும் நிம்மதியா படுத்து எழும்புறோம். இதுவே எங்களுக்கு போதும். முகாம் வாழ்க்கை பழகிப்போன ஒன்றாக... read more

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்…

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்… இன்னைக்கு பேசப்போறது எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான். நாம் எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை ஒரு நொடியில் முடிவெடுக்கப்படுபவைதான் என்பதை எல்லாரும் அறிவோம். அப்படி எடுக்கும் முடிவுகள் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதையே கொஞ்ச நேரம் யோசித்து… இதைச் செய்யலாமா… வேண்டாமா… என முடிவெடுத்தால் பல கெட்ட முடிவுகளை நாம் எடுக்காமலே விடமுடியும். ஆனால் அதை நாம் செய்வதில்லை என்பதே உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீடியோ பார்த்தேன்… ஒரு இளம்பெண் இரயில்வே ஸ்டேஷனில் போனில் பேசிக்கொண்டு இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது இரயில் வருகிறதா என்றும் பார்க்கிறாள். பார்ப்பவர்கள் எல்லாருமே அவள் இரயிலுக்குக் காத்திருப்பதாகத்தான் நினைத்திருப்பார்கள். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தாள்… ஆனால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக. ஆம் இரயில் அருகே வர படக்கென்று நடைமேடையில் இருந்து குதிக்கு தண்டவாளத்தில் படுத்துவிட்டாள். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என்று திகைக்க, சிலர் சிரத்தையாய் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு லைக்கும் கமெண்ட்டும்தானே மனிதாபிமானம். இரயில் ஏறி அவளை இரண்டு துண்டாக்கிச் சென்றது. எதற்காக இப்படி ஒரு முடிவு… அப்படி என்னதான் பிரச்சினை என்றாலும் பொறுமையாய் சிந்தித்து அதற்கான முடிவை எடுத்தால் எல்லாம் சுகம்தானே. அவசர முடிவால்தான் நாங்கள் ஒருவனை இழந்தோம். அந்த நொடி தற்கொலை முடிவு அவர்களுக்கு சரியானதாகத் தெரிகிறது. ஆனால் அதன் பின்னான வாழ்வில் தினம் தினம் அவர்களின் குடும்பம் செத்துக் கொண்டிருப்பதை அவர்கள் நினைப்பதில்லை. ம்… எல்லாம் அந்த நொடியின் செயல்பாடுகள்தானே. நாம் ஒரு நொடி சிந்தித்தால் நல்ல அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்திடலாம். நம் குறைகளை ஓரளவுக்காகவாவது நிறைவேற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை தேர்ந்தெடுத்திடலாம். வாழவே முடியாது என்ற நிலையில் இருந்து இதிலும் வாழ்ந்து பார்த்திடலாம் என்றும் நினைத்திடலாம். இந்தப் பாடம் அப்படி என்ன பெரிய விஷயம்… என்னால் பாஸாக முடியும் என்று நினைத்தால் கஜினி முகமது படையெடுப்பை கட்டுக்குள் வைத்திடலாம். இப்படி நிறைய விஷயங்களில் நம்மால் ஜெயித்திருக்க முடியும். ஆனால் எதையும் சிந்திப்பதில்லை. காசு கொடுத்தா போதும் அவனுக்கு குத்திட்டு வந்து குத்துதே குடையுதேன்னு கவிழ்ந்து கிடப்போம். காதல் தோல்வியா, பரிட்சை தோல்வியா கயிறையோ மருந்தையோ எடுத்துக்கிட்டு போயி முடிச்சிக்குவோம்.  எல்லாம் ஒரு நொடி முடிவுதானே. இந்தா கச்சா எண்ணெய் 28 டாலருக்கு வந்திருச்சு. இங்க கம்பெனிக்காரன் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறான். கட்டுமானப் பணியில் அமீரகத்தில் பிரபலமான ETA (இது தமிழரின் கம்பெனி) குழுமம் இன்று தனது பணியாளர்களில் 35% பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இது தற்போது நண்பர் சொன்ன தகவல். இப்படி நிறைய கம்பெனிகள் ஆட்டம் கண்டுபோய் இருக்கின்றன. என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் விலை குறையாது. காரணம் தனியார் முதலாளிக்கு சொம்பு தூக்கும் அரசாங்கமே. 127 டாலர் இருக்கும் போது இருந்த விலைக்கும் 30 டாலர் இருக்கும் போது இருக்கும் விலைக்கும் சில ரூபாய்களே வித்தியாசம். இதையெல்லாம் நாம் கேட்கமாட்டோம். ஏனென்றால் நம் சிந்தனையெல்லாம் இதில் மட்டும்தானா..? அவனும் ஒரு ரூபாய் கூட்டினால் 75 பைசா இறக்குவான். விலை கூடும்போது நள்ளிரவு முதல்ன்னு காலையில அறிவிப்பான். பங்குக்காரனும் பெட்ரோல் இல்லைன்னு சொல்லி ஸ்டாக் வச்சி நள்ளிரவுக்கு மேல நல்லாச் சம்பாரிச்சுக்குவான். இப்படித்தான் ஓடுது…. இனியாவது ஒரு நிமிடம் சிந்தித்து செயல்படுவோம் மக்களே… (இது விஜயகாந்த் சொல்லும் மக்களே இல்லைங்கோ) சரிங்க… என்னடா இவன் ஆபீஸ்ல நடந்த கதையின்னு சொல்லிட்டு என்னமோ பேசுறானேன்னு பார்க்கிறீங்கதானே… இல்லை கச்சா எண்ணெய் பிரச்சினை இங்க கடுமையாத் தாக்கும் போல தெரியுது. எங்க கம்பெனி வேலை எல்லாமே அரசாங்க வேலைகள் என்பதால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் இப்ப பார்க்கிற வேலைக்குப் பின் புதிய வேலை எதுவும் இல்லை என்பதே உண்மை. அரசு அலுவலகங்கள் புதிய வேலைகளில் இன்னும் துணிந்து இறங்கவில்லை என்பதும் உண்மை. ஒரு வேலை போனால் அதே நிலையில் வேலை... read more

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

http://puthiyamalayagam.blogspot.com/ “எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை” – இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல். ஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் ‘கேச­ரி’க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர். ஆம்! புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு. ஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன. அடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள். இந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. இக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர். வள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள். அரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள். “யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்” என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர். பி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார். “நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது. 2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது. தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை. நாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள். நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது” என்றார். எஸ்.சரோ­ஜினி(66) என்பவர் கூறு­கையில், “நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள். வேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்” என்றார். அரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது. அதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும். அவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர். தோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும்... read more

“றோவும்” இலங்கை அரசியலும்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்குவந்துவிடும் எனலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிருஸ்டியும் மகிந்த யுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து மைத்திரியுகத்தினை தொடக்கி வைத்தவருமாகிய சந்திரிக்காவும் மைத்திரிக்கு எதிரான ஒருநிலைப்பாட்டுடன் லண்டன் சென்று திரும்பி தற்சமயம் வந்துகொண்டிருக்கிறார். ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியினை தொடர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையினை மஹிந்த இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த58 இலட்சம் வாக்குகள் உண்மையில் மக்களால் விரும்பி அளிக்கப்பட்ட வாக்குகளா? அல்லது முழு அரச இயந்திரங்களையும் பயன்படுத்திப் பறிக்கப்பட்டவாக்குகளா? என்பதற்கான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க மஹிந்தவுக்கு எதிராக விழுந்த 62 இலட்சம் வாக்குகளும் மைத்திரியின் தனிவாக்குகள் என்று கூறமுடியாது. இங்கேதான் ஒரு விடயத்தினை உற்று நோக்கவேண்டும். ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி மைத்திரிஅணி, ஐ.தே.க, ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகமக்கள் முன்னணி, ஜே.வி.பி,த.தே.கூ என பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எடுத்த வாக்குகளே 62 இலட்சம் ஆகும். ஆனால் மஹிந்த பெற்ற வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றவாக்குகள். இன்று ஈ.பி.டி.பி யினரை விட ஐ.ம.சு.கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வெற்றிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்டன. தென்னிலங்கை சிங்களக் கட்சியினுடைய கூட்டினை வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்கள் விருப்பவில்லை என்பதனை உணர்ந்து கொண்டும், அத்துடன் தமது ஆதரவாளர்கள், மக்கள் ஆகியோரிடையே ஏற்படுத்திக் கொண்ட கருத்துக் கணிப்புக்களும் டக்ளஸ் தேவானந்தாவை தனித்து தேர்தலில் களம் இறங்க வைத்துள்ளது. காலாகாலமாக சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சிங்களத்துடன் ஒரு அவதானமாகவே பழக விரும்புகின்றனர். இதன் காரணமாக சிங்களத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பியினை மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக கடந்த தேர்தல்களில் தோற்கடித்துள்ளார்கள். தற்சமயம் டக்ளஸ் தேவானந்தா யாழ்மாவட்டத்தில் வீணைச்சின்னத்தில் தனது கட்சியில் போட்டியிடுவதனால் 7 சீட்களில் ஒன்றினுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. மீதி 6 சீட்களுக்கும் கடும் போட்டி நிகழலாமெனக் கூறப்படுகின்றது. விகிதாசாரத் தேர்தல் முறையில் இத்தேர்தல் நடைபெறுவதால் மக்கள் வாக்களிப்பு வீதம் வெற்றிதோல்வியில் கூடியளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த எதிர்ப்பு அலை ஒன்று யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிகம் வீசினாலும் வெற்றிலைக்கு சுமார் 75,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது யாருடைய வாக்கு என்பதனைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வடமாகாணசபை தேர்தல் போன்றதொரு வாக்குப்பதிவு நடைபெறுமாயின் கட்சிகள் மிக அதிகம் வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும். வாக்குகள் கட்சிகள் சார்ந்து பிரிகின்ற போது சொற்பவாக்குகளைப் பெற்றவர்களும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடிய வாய்ப்புள்ளது. த.தே.கூவில் மிக முக்கிய தலைவர்களாகப் போட்டியிடுபவர்களில் மாவை, சித்தார்த்தன், சுரேஸ், சிறிதரன், சுமந்திரன், சம்பந்தன், பொன் செல்வராசா, அரியநேந்திரன், யோகேஸ்வரன், அடைக்கலநாதன், சிவசக்திஆனந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் பலருடைய வேலைத்திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் போதாது என்ற குறைபாடு உள்ளது. கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்ற குறைபாடொன்றும் உள்ளது. ஒட்டு மொத்த இலங்கையர்களும் ஜனவரி 8 இல் எவ்வாறு ஒரு மாற்றத்தினை கொண்டுவந்தாhர்களோ அதே போல ஆகஸ்ட் 17 லில் ஒரு பெரிய மாற்றத்தினை இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்துவார்கள் என்பது வெள்ளிடைமலை. மஹிந்தவை அகற்றி மைத்திரியைக் கொண்டுவந்த மக்கள் மீண்டும் மைத்திரியைத் தர்மசங்கட நிலைக்குத் தள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மைத்திரி ஆட்சிக்கு பக்கபலம் சேர்ப்பார்கள். ஆகவே வெற்றிலை மீண்டும் துளிர்க்கலாம். தென்னிலங்கையில் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் மைத்திரி-மஹிந்த கூட்டு எடுபடுமா? என்ற கேள்வி ஒன்றுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பல தேர்தல்களில் ஐ.தே.க. வுக்கு வெள்ளையடித்தார்கள். ஐ.தே.கவின் உதவியுடன் தான் மைத்திரி மஹிந்தவை வென்றார். இம்முறை இதே உத்தியை வைத்துத்தான், இருவரும் சேர்ந்து மீண்டும் ஐ.தே.கவின் முகத்தில் சாணியடிக்கத் தயாராகிவிட்டனர். மைத்திரி-மஹிந்த இருவரும் ஸ்ரீ.ல.சு,க யின் அடிப்படைவாதிகள். இந்தக்கட்சியின் தூண்கள். வடமத்திய மாகாணத்தில் தனக்கென ஒரு இடத்தினை... read more

யாழ். பல்கலைக்கழகமும் பாலியலும்!

தமிழ் மக்களின் விடுதலை உயிர்மூச்சாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் இன்று மோசமான பாலியல் வன்முறைக் கூடமாக மாறி வருகின்றமை குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டு வெளியேறியவன் என்ற ரீதியில் எமது பல்கலைக்கழகத்தின் தற்கால செல்நெறி குறித்து நானும் எனது வேதனையை இங்கு பதிவுசெய்கின்றேன். வெளியே இடம்பெறுகின்ற அத்துமீறல்களுக்காக குரல்கொடுக்கின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் என்பனவும் உள்ளே இடம்பெறுகின்ற அசிங்கங்களை கண்டும் காணாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது. யாழ்.பல்கலைக்கழகத்தில் சில துறைகளில் கல்வி கற்கும் மாணவிகள் அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்றால், ஏன் பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்றால் குறித்த விரிவுரையாளர்களின் ஆசைக்கு இணங்கவேண்டும். அவர்களின் ஆசைக்கு எதிர்ப்புக் காட்டும் மாணவிகள் பல ஆண்டுகள் சென்றாலும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாத பரிதாபம். இதனால் சில மாணவிகள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களின் ஆசைக்கு இணங்கவேண்டிய நிலை. அண்மையில், ஒரு மாணவியை தனது அறைக்கு அழைத்த விரிவுரையாளர் ஒருவர் அந்த மாணவியின் விருப்பத்திற்குமாறாக அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயன்றார். இதன்போது குறித்த மாணவியின் மேலாடையின் முன்பக்கம் கிழிந்த நிலையில் அவர் அறையை விட்டு தப்பி வெளியேறியதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலாக விரிவுரையாளர் ஒருவர் ஏமாற்றிய காரணத்தாலேயே அண்மையில் அப்பாவி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன. கல்வி என்ற பெயரில் விரிவுரையாளர்களால் அரங்கேற்றப்படும் இந்த அசிங்கத்தனமான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது யார்? கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் செயல் திறன் உள்ள மாணவர் ஒன்றியம் இருந்ததால் விரிவுரையாளர்கள் அடங்கியிருந்தார்கள். மாணவர்களின் சக்தி அவர்களை அடக்கி வைத்திருந்தது. ஆனால், இன்று பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற இம்சைகளைப் பார்க்கும்போது இவ்வாறான மாணவர் ஒன்றியம் இருக்கின்றதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மாணவர் ஒன்றியத் தெரிவின்போது தமிழ் அரசியல்வாதிகளை விடவும் அதிக பிரச்சாரம் செய்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரி தலைமைப் பதவிக்கு வருகின்ற மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்களால் அரங்கேற்றப்படும் நாசகார செயலை பார்த்துக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களின் அடையாளமாக, தமிழ் மக்களின் பேசு பொருளாக திகழ்ந்தது. அந்த ஒன்றியம் ஒரு அறிக்கை விட்டால் யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி சர்வதேசம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அதற்கு மதிப்பளித்தனர். மாணவர்களின் கருத்துக்கு பின்னால் அணி திரண்டனர். ஆனால், இன்று அந்த வகிபாகம் கேள்விக்குறியாகியுள்ளமைக்கு மாணவர் ஒன்றியத்தின் செயற்றிறன் அற்ற நிலையே காரணமாகும் என்பதை இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகின்றேன். இந்தப் பதிவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் அனைவரையும் பாதிக்கப்பட்டவர்களாக சித்திரிக்கவில்லை. ஆனால், சில துறைகளில் கற்கும் மாணவிகள் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக பல்கலைக்கழகம் சென்று திரும்புவதையே சுட்டிக்காட்டுகின்றது. அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு இடம்பெற்ற மோசமான செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கமும் உள்ளே பல வித்தியாக்கள் உருவாகுவதை பார்த்துக்கொண்டே ஏன் மௌனமாக இருக்கின்றனர்? சர்வதேச ரீதியாக மதிப்பு பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தை அதன் புனிதமும் கௌரவமும் கெடாத வகையில் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வழிவழியாக வருகின்ற மாணவர் ஒன்றியங்களுக்கு மட்டுமே இருக்கின்றது. இந்த பாத்திரத்தில் இருந்து மாணவர் ஒன்றியம் விலகக்கூடாது. அன்பான மாணவர்களே, மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை அறிந்திருந்தும், நடைமுறை வாழ்க்கையில் தெரிந்திருந்தும் உள்ளே சில காமுகர்களால் உங்கள் சகோதரிகள் வதைக்கப்படுவதை பார்த்துக்கொண்டு ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்? உங்கள் மௌனம் அந்தக் காமுகர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? ஏத்தனை காலம்தான் இதைப் பொறுத்துகொள்ளப்போகின்றீர்கள்??? யாழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்... read more

top