search
top

இன்னும் சில நாட்கள்…..

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்…. நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்…… என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். “நான் இறந்துவிட்டேனா?” நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும். இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். “ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்” என் மனைவி அறையில் நுழைந்தாள். “நீ அழகாக இருக்கிறாய் ” என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. “கடவுளே!” நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்! திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். “தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி. ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். .. என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. ” இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்றேன் முதன் முறையாக. முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.... read more

திலீபன்

திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம் எழுதிய கவிதை, தமிழில் : ஃபஹீமாஜஹான் திலீபன் ………………………………………………………………… அனேகமானோர் கடந்து செல்வர் காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட உனது நினைவுகளை யாருக்கும் தெரியாமல் அவற்றைப் பொறுக்கிக் கொள்கிறேன் உன்னதமெனப் போற்றும் கொள்கையொன்றுக்காக மனிதனொருவனால் வாழ்வினை உதறியெறிந்திட முடியுமா வீரன்தான் அவன் என்றுமே எனக்கு பெயர் , ஊர் அடையாளஅட்டை எதுவும் தேவையில்லை ‘தேசப் பிரேமி’களின் கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர் திலீபன்… இன்றைய இராப்பொழுதும் உனது நினைவுகளை உள்ளத்தினுள்ளேயே சிறைப்படுத்திக் கொள்கிறேன் யாருமறியாமல் (இக் கவிதை மறுபாதி இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. நன்றி –... read more

பர்ஜானா – சிறுகதை

பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள். பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள். மாதமாதம் சரியாக தனது அம்மாவிற்கு பணம் அனுப்பி விடுவார்கள். மாதம் முதல் வாரம் ஆகிவிட்டால் பர்ஜானாவை  வெஸ்டர்ன் யூனியனில் பார்க்கலாம். பர்ஜானா தனது மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதனால் தனது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்ததால் புதிய, புதிய சேலைகளை வாங்குவது, விதவிதமாக சாப்பாடு ஆக்கி சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக இருப்பார். தனது பையன்கள் வெளிநாட்டில் இருந்து எனக்காக பணம் அனுப்புகிறார்கள் அதனால்தான் நான் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பலரிடமும் பெருமையடித்து கொள்வார். தான் வாங்கிய புதிய சேலையை தனது தோழி பாத்திமாவிடம் காட்ட அவர் வீட்டிற்கு செல்கிறார். “என்ன பாத்திமா எப்படி இருக்க” “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க” “எனகென்ன சூப்பரா இருக்கேன்” “புது சேலை வாங்கினேன், உன்கிட்ட காட்டலாம்னு வந்தேன்”. “அப்படியா எடு பாப்போம்” “அட நல்லா இருக்கே” “யாரு உன் பையன் அனுப்பினானா” என்றால் பாத்திமா. “இல்லடி. பையன் அனுப்புன பணத்துல இங்கேதான் வாங்கினேன். அவன் அனுப்புன பணத்தை வைச்சி நான் என்ன செய்யபோறேன்”. அதான் இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்றேன்”. சந்தோசமா இருக்கேன்” “சரி பாத்திமா, சாப்டாச்சா” “இல்லடி இப்பதான் கஞ்சி காய்ச்சிகிட்டு இருந்தேன் நீ வந்துட்ட” “கஞ்சியா? ஏன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்லே” “சேலைய பாரு, என்னடி சேலை இது, ஒரு நல்ல சேலை கட்ட வேண்டியதுதானே உன் பையன் தான் சம்பாரிக்கிறான்லெ” “உன் பையன் மாதிரி என் பையன் என்ன வெளிநாட்டுலேயா சம்பாரிக்கிறான். அவன் இங்க சம்பாரிக்கிற பணம் குடும்ப செலவுக்கே சரியாகி விடுகிறது”, “என்ன செய்ய என் பையன் வருசத்துக்கு இரண்டு, மூன்று சேலை எடுத்து தரான், எனக்கு அதுவே போதும்”. “சரி பாத்திமா நான் வரேன்” டைம் ஆகிடுச்சி” என்று தனது வீட்டிற்கு சென்றார் பர்ஜானா. வீட்டிற்கு நுழைந்தவுடன் போன் ஒலித்தது. “ஹலோ யாருங்க” “நாந்தாம்மா காமில், நல்ல இருக்கீங்களா” “நல்லா இருக்கேன் காமில், நீ எப்படி இருக்கே” “நான் நல்ல இருக்கேன் மா, வர பக்ரீத் க்கு ஒரு மாதம் லீவு கிடைச்சிருக்கு இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான் “சரிப்பா” என்று போன் வைத்து விட்டார் பர்ஜானா. இன்னும் இரண்டு நாளுல்ல பையன் வருவதால், அவனுக்கு பிடித்த பலகாரங்கள் செய்வது, வீட்டை கழுவி சுத்தம் செய்து என்று தனது வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார். இரண்டு நாள் கழித்து விடியற்காலை உதயமானது. “அம்மா” என்று சப்தமிட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது. “கதவை திறந்தார்  பர்ஜானா. வெளியே காமில். “அம்மா எப்படி இருக்கீங்க பார்த்து எத்தன நாள் ஆச்சு”, “நீ எப்படி ராசா இருக்கே” எல்லோரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். “ஏம்பா பசங்கள அழைச்சிட்டு வரல”. “பசங்களுக்கு ஸ்கூல் லீவு கிடைக்கல”. அதான் தம்பி வீட்டுள்ள விட்டுட்டு வந்திருக்கேன்”. அவன் பார்த்துக்குவான். “அப்படியா சரி, பசங்கள பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன். அடுத்த தடவை வரும்போதாவது கூட்டிட்டுவாப்பா” காமில் வந்த ஒரு மாதம் விறுவிறு வென்று ஓடியது. காமிலும் அவனுடைய சில வேலைகளை முடித்துக் கொண்டான். உண்மையில் அம்மாவை சந்திப்பதற்காக மட்டுமல்ல வேறு சில வேலையும், நோக்கமும் அவனுக்கு இருந்தது. “அம்மா இந்தாங்க, இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. வச்சிகுங்க”. என்று கொடுத்தான் காமில். வாங்கி வைத்துக் கொண்டார் பர்ஜானா. இதை பார்த்துக்கொண்டிருந்த காமிலின் மனைவிக்கு கோவம் தலைக்கேறியது. காமிலை ரூமுக்கு அழைத்து திட்டினால். “எதுக்கு உங்கம்மாவுக்கு இவ்ளோ பணம், அதான் மாசமாசம் அனுப்புரீங்கள்ள அப்பறமென்ன” என்று பொரிந்து தள்ளினாள். “இல்லைடி, அவங்களுக்கு யாரு இருக்கா, இவ்வளவு பணத்த அவங்களால செலவு பண்ண முடியாது. எப்படியும் அவங்களுக்கு... read more

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும் ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும் மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும் வயல்களில் வசந்தங்களும்... read more

top