search
top

வலி சுமந்த நெஞ்சம்…

கட்டியழ தோளுமில்ல
கண்ணீர துடைக்க யாருமில்ல
எட்டி ஒரு சேதி சொல்லி -எங்கள்
குறை தீர்க்க வழியுமில்ல ….

நாதியற்று போனதால
நாடு நாடா அலையுரமே …
நம்பிக்கையை ஏந்திக்கொண்டு
நாலா திசையும் திரியுரமே ….

சிந்திய இரத்தமெல்லாம் ..
சிறகொடிந்து வாழ்வதற்க்கா ..?
எம் தலைவன் விதைத்த விதை
எறும்பு தின்று அழிவதற்கா ..?

குண்டு துளைத்த நிலம் …
குற்றுயிரும் …கொலையுயிராய் …
குடியேற்ற சிங்களவனால்
கொடுமைதான் தொடர்கிறதே ….

மண் காக்க உயிரிழந்து ..
கையிழந்து …காலிழந்து ..
கண்ட கனவு பொய்த்து
கதியிழந்து நிற்கும் நிலை …

ஒல குரலெழுப்பி …
உலகெல்லாம் சிதறிச் சென்றோம் …
கேக்க நாதியில்ல ..
நீதி சொல்ல யாருமில்ல …

சூழ்ச்சிக்கு இரையானோம் …
சோதனையின் களமாணோம்..
வீழ்ச்சியுற்ற வேதனையில் …
எழுச்சியுர மறந்து விட்டோம் ..

எதிரியின் சூழ்ச்சியில ..
இணைந்துகொள்ள மறந்து போனோம்…
தாயகம் தரிசாக …
தலைமுறைய தொலைத்து நின்றோம் ?..

மண்ணுக்குள்ள வாழுகின்ற
மறவர்கள மறந்துவிட்டோம் …
மண்ணுரிமை காக்க தவறி
அடிமையாய் வாழ பழகிவிட்டோம்….

-காந்தன் மலைச்சாமி-

banner ad

Comments are closed.

top